ஆர்வம் ( Aarvam ) | தமிழ் கதைகள் | Short story

      இன்றைய உலகில் வாழும் அனைத்து மக்களிடையே காணப்படும் ஒரு நேரடியான அல்லது அவர்களின் உள்ளுக்குள் இருக்கும் ஓர் உணர்வுதான் ஆர்வம். இது மனிதனின் மூளையை பிரமிக்க செய்யும் கருவியாகவும் விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆர்வ மிகுதியுடன் விளங்கும்  ஒரு பையன்தான் கர்ணன். மகாபாரதத்தில் வரும் கர்ணனை போன்று நல்ல உள்ளமும், மிகுதியான வீரமும் கொண்டவன். அவன் பிறந்தது முதல் இன்றளவும் படிப்பிலும், விளையாட்டிலும் தன் ஆர்வத்தைச் செலுத்தி வருகின்றான்.

     குழந்தை பருவம் என்றாலே அனைவரது நினைவிலும் பள்ளிப் பருவ நாட்கள்தான். பள்ளியில் மாணவர்கள் மிகவும் குறும்புத்தனமாகவும், படு சுட்டிகளாகவும் இருப்பார்கள். இதற்கு அப்படியே எதிர்மறையானவன்தான் நம் கர்ணன். அவன் தன் இரண்டாம் வகுப்பில் சேர்ந்தபின் பள்ளி படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் படித்து முதல்மதிப்பென் எடுத்து, அனைத்து ஆசிரியர்களிடமும் நன்மதிப்பை பெற்றான்.

     வகுப்புகள் மேலே செல்ல செல்ல சரியான நண்பர்கள் சேர்க்கை இல்லாத காரணத்தினால் படிப்பில் தன் நாட்டத்தைக் குறைத்துக் கொண்டே வந்தான். தன்னைப் பற்றியும், பிரரிப் பற்றியும் எந்த வித கவலையும் இல்லாமல், ஊதாரியாக சுற்ற ஆரம்பித்தான்.

     ஒரு நாள் திடீரென அவனுக்குள் ஓர் ஐயம் எழுந்தது. ஒரு படத்தில் வரும் காட்சியை  அவனுக்குள் சில மாற்றங்கள் நிகழ்ந்தது. தன் பழைய நிலையை எண்ணிப் பார்க்கத் தொடங்கினான். இட்டடியே நாட்கள் கடததத் தொடங்கினான். சட்டென விழித்துக் கொண்ட பின், பத்தாம் வகுப்பில் மூன்றாம் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தான்.

     இவையெல்லாம் கனவா, கற்பனையா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பல நாட்கள் கடந்துபோயின. அப்போதுதான் தன் குடும்பத்தின் நிலை உணர்ந்து, மீண்டும் படிப்பில் ஆர்வத்துடன் முழு கவனத்தைக்காட்ட தொடங்கினான் . எனினும், அவற்றில் முழு கவனத்தை செலுத்த முடியவில்லை. குடும்பத்திற்கு சிறு சிறு வேலையையும் செய்ய வேண்டிருந்தது.

     இருந்தாலும் அவன் படிப்பின் பயனை உணர்ந்து, எவளவு கடினமான சூழல் அமைந்தாலும் அவற்றையெல்லாம் துடைத்தெரிந்து, தன் இலட்சியத்தை அடைவதற்காக இரவு பகலாய் படிப்பில் நாட்டத்தைச் செலுத்தி, பள்ளி அளவில் அதிக மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தான்.

     அப்போதுதான் அவனின் பழம் அவனுக்கு தெரியவந்தது. பிறகு மேல்படிப்பிற்காக தன் குடும்பத்தையும், தான் பறந்து திறந்த ஊரையும விட்டு சென்றான். உறுதியான எண்ணமும், தன்னம்பிக்கையும் கொண்டால்தான் நினைத்ததை அடைய முடியும் என்ற சொற்றொடரை அவனை மிகவும் உணர்ச்சிப் பூர்வமான செயலைச் செய்ய தூண்டியது. அந்த இடத்தின் சூழலும, திடமும், அவனை மிகுந்த துயரத்தை அடைய செய்தது. அங்கு அவனால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியவில்லை. எனினும் போராட வேண்டும் என்ற உருதிப்பாட்டுடன், நிலையான எண்ணத்தை வளர்த்துக் கொண்டு வெற்றிப் பெற்றான்.

     அதன்பிறகு வாழ்க்கை அவனுக்கு சற்று கடினமாக அமைந்தது. எந்த துறையில் சென்றால் நான் வெற்றியையும் நல்ல ஒழுக்கத்தையும் பெற முடியும் என்பதை உணர்ந்த, பல யோசனைகளுக்கு‌ பின் தமிழ் இலக்கியங்கள்மீது தனக்கு ஒரு ஆர்வம் இருப்பதை அறிந்தான்.

     அதனால் அதையே தன் வாழ்க்கையுடன் தொடர்புப்படுத்திக் கொண்டு, ஆர்வாத்தைச் செலுத்தி மீண்டும் படிக்கத் தொடங்கி அதில் வெற்றியை கண்டான்.

     அதன் பிறகுதான் வாழ்க்கையின் வளமான புதிர் என்பது பற்றி அவனுக்கு தெரிய வந்தது. படித்தால் மட்டுமே, வழக்கை உயரும் என்ற வாக்கியம் மட்டுமே அவனது நெஞ்சில் படுமரத்தானிபோல் ஆழமாய் பதிந்திருந்தது.

     பல நாட்கள் சிறு சிறு வேலைச் செய்து வந்தான். அதன் மூலம் வரும் வருவாயை சிறுக சிறுகச் சேமித்து வைத்து, அடுத்தக் கட்டத்திற்கு தன்னை தயார்படுத்தினான். ஆனால் குடும்பத்தின் வறுமையும், ஏழ்மையும் அவனை வெகுவாய் பாதித்தது.

     கர்ணனுக்கு இனியும் படிப்பு சாத்தியமே இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டான். கடும் நெருக்கடிக்கு பின், கர்ணன் தன் இலட்சியத்தை நோக்கி மீண்டும் பயணிக்க தொடங்கினான். "பாதை முடிந்த பின்பும் பயணம் முடிவதில்லை" என்னும் சொற்றொடர் நியதிக்கேற்ப அவனது வாழ்க்கைத் தேடலுக்கான பயணம் இன்றும் தொடந்துக்கொண்டே இருக்கிறது.

     குடும்பம் அவனது வெற்றியை கான்பதற்காக பல நாட்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். கர்ணனும் தன் ஆர்வத்தை செலுத்தி உழைத்துக் கொண்டே இருக்கிறான். பல வெற்றியை பெற்ற தலைவர்களையும், தேசத்தின் ஒற்றுமைக்காக பாடுபட்ட அற்புத மனிதர்களையும், தன் நினைவோடு வைத்துகொண்டு இன்றும் ஓடுகிறான் வெற்றியின் விளிம்பை நோக்கியே ஆர்வத்தின் அற்புதமான மன வலிமையுடன்.


"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு."

- திருவள்ளுவர்


Story written by;

முத்துகுமார் B.A, M.A, B.Ed

0 கருத்துகள்

Recent posts

முதுமை (Muthumai) தமிழ் சிறுகதை, Tamil Short Stories