தனியாள் ஆய்வுமுறை (Case Study)| வழிகாட்டுதல் | அறிவுரை பகர்தல்

 தனிநபர் ஆய்வு :

     தனிநபர் ஒருவரின் மாறுபட்ட நடதைக்கான காரணங்களை அறிவியல் முறைப்படி அந்நபர் தொடர்பான விவரங்களை அறிந்து அவற்றை ஆய்வு செய்து, ஆய்வின் அடிப்படையில் முறையான தீர்வினை கூறுதலே தனிநபர் ஆய்வு எனப்படும்.


தனியாள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவோர் :

     (1). மிக உயர் அடைவினை உடையவர்.

     (2). தன் திறமை அறியாது செயல்படுவோர்.

     (3). ஒழுக்கம் மற்றும் நடத்தை கோளாறு உடைய மாணவர்கள்.

     (4.). வகுப்பறையில் சிறந்து விளங்குவோர்.

தனியாள் ஆய்வுமுறையின் செயல்பாடுகள் :

     (1). தகவல்களை சேகரித்தல் (Information Gathering).

     (2). உற்று நோக்கல் (Observation).

     (3). பேட்டி (Interview).

     (4). தர அளவுகோல் (Quality Criteria).

     (5). நுண்ணறிவு சோதனை (Intelligence Test).

     (6). நாட்டச் சோதனை (Curiosity Test).

     (7). வினாவரிசை (Questionnaire).

     (8). கவர்ச்சி பட்டியல் (Attractive List).

     (9). மனப்பான்மை சோதனை (Attitude Test).

     (10). ஆளுமைச் சோதனை (Personality Test).


தனியாள் ஆய்வின் படிநிலைகள் :

     (1). ஆய்வுக்குரிய நபரை நேர்ந்தெடுதல்.

     (2). ஆய்வுக்குரிய நபர் பற்றிய தகவல்களை சேகரித்தல்.

     (3). மாற்றத்திற்கான காரணங்களை ஊகித்தல்.

     (4). மாற்றத்தை சீர்செய்யும் முறைகளை தயார் செய்தல்.

     (5). தொடர்ந்து கண்காணித்தல்.

தனியாள் ஆய்வின் முக்கியத்துவம் :

     பள்ளியில் நடத்தப்படும் தனியாள் ஆய்வுகள் பல்வேறு நோக்கங்களை நிறைவு செய்கிறது.

     i) பிரச்சனைக்குரிய மாணவரின் காரணம் கண்டறியப்பட்டு அம்மாணவரின் பிரச்சனை சரி செய்யப்படுகிறது.

     ii) ஆசிரியர் ஒரு மாணவரை பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ள பயன்படுகிறது.

     iii) மாணவரின் விவரங்களை அறிந்த பின் தகுந்த அறிவுரையை பகிர்வதால் மாணவரின் நடத்தையில் மாற்றதை ஏற்படுத்த முடிகிறது.


சிறந்த தனியாள் ஆய்வின் சிறப்பியல்புகள் :

     i) பல்வேறு மூலங்களில் இருந்து தகவல்களை சேகரித்து அதன் அடிப்படையில் ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.

     ii) நம்பகத்தன்மை கொண்ட மற்றும் பொருத்தமான தகவல்களை சேகரித்தல் வேண்டும்.

     iii) அதிக கால இடைவெளியின்றி ஆய்வினை நடத்த வேண்டும். 

     iv) தகவல்கள் ரகசியமாக ஆய்வுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

     v) முடிவுக்கு பின்னர் தொடர் கண்காணிப்பில் இருத்தல் வேண்டும்.


தனியாள் ஆய்வின் குறைகள் :

     i) ஆய்வுக்கு உட்படுத்தப்படட்டவரின் பெற்றோர்கள் அழுக்கும் தகவல்களை சரி பார்பது இயலாத காரியமாகும்.

     ii) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவரின் சில அம்சங்கள் விடுபட வாய்ப்புகள் உள்ளது.

     iii) விவரங்களையும் அதற்கான விளக்கங்களையும் சேகரிப்பதற்கான கால இடைவெளி அதிகமாகவும் உள்ளது. 

     iv) ஆய்வாளரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.

     v) சரியான அனுபவம் இல்லாமல் ஆய்வு செய்பவரின் முடிவுகள் சில நேரங்களில் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

     vi) தனிநபர் ஆய்வினை மேற்கொல்வோருக்கு உளவியல் ( Physcology ) மற்றும் சமூகவியல் ( sociology ) பற்றிய தேவையான கற்றல் அறிவு இருத்தல் வேண்டும்.

     vii) காரணங்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாமல், ஆய்வுக்கு உட்படுத்தப் படுவோரின் முந்தைய பார்வயைக் கொண்டு அனுமானிக்கக் கூடிய அபாயம் உள்ளது. 

     viii) ஆய்வாளரின் கவனகுறைவு தனிநபர் ஆய்வு முடிவின் நம்பகத்தன்மையை கெடுத்து விடும்.


தனியாள் ஆய்வுமுறையில் ஆசிரியரின் பங்கு :

     முந்தையகாலப் பள்ளியில் ஆசிரியர்களது பொருப்பானது மாணவர்களுக்கு கல்வி கற்பித்து அவர்களின் அறிவினைப் பெருக்குவதுடன் மட்டும் நின்றது. ஆனால், இன்று ஆசிரியர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் அதிகமாக உள்ளன. 

     வருங்கால சமுதாயம் பகுத்தறிவு, ஒழுக்கம், மனிதநேயம், அறிவு மற்றும் அன்புடன் சீரும் சிறப்புமாக வாழவதற்கு மாணவர்களை தயார் செய்யும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு.


     ✓ வழிகாட்டுதல் (Guidance).

     ✓ அறிவுரை பகர்தல் (Counselling).

     ஆகிய இரண்டும் இன்றைய கல்வி அமைப்பில் முக்கியமான ஒரு பகுதியாக உள்ளது.

வழிகாட்டுதல் (Guidance) :

     வழிகாட்டுதல் என்பது, ஒரு தனிநபரின் திறமைகளை புரிந்து கொண்டு அவருடைய தேவைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றவாரு முடிவெடுத்து செயல்பட உதவி செய்வதாகும்

     பிரச்சனையை முழுவதுமாக புரிந்துக் கொள்ள தேவையான தகவல்களை அளித்து, புரிதல் நிலையை ஏற்படுத்துவதன் மூலம் ஒருவர் தனது பிரச்சனையைத் தானே தீர்த்துக் கொள்ளும் ஆற்றலை பெற்றிட உதவுதே வழிகாட்டுதல் ஆகும்.

     வழிகாட்டுதல் என்பது தனி நபர் தன் பிரச்சனையை தானே தீர்த்துக் கொள்ள உதவும் ஒரு வழிமுறை ஆகும்.

     ஒருவர் தன் வாழ்வில் பள்ளியை தேர்வு செய்வதில், மேல் படிப்பினை தேர்வு செய்வதில், தொழிலினை தேர்வு செய்வதில், திருமண உறவில், குடும்ப பிரச்சனையில் மற்றும் ஆபத்து நேரங்களில் வழிகாட்டுதலின் படியே செயல்படுகிறார்.

     ஆர்தர் ஜே. ஜோன்ஸ் (Arthur J. Jones) என்பவர் "வழிகாட்டுதலின் நோக்கம், ஒருவன் தனக்கு தேவையானவற்றை அறிவுடன் தேர்வு செய்யவும், பொருத்தப்பட்டு நடத்தயினைப் பெறவும், வாழ்வின் இக்கட்டான சூழ்நிலையில் தான் செய்ய வேண்டியவை யாவை என்பதை புரிந்து கொண்டு செயலினை செய்ய உதவி செய்து, சுயநெரிபடுதல் என்னும் ஆற்றலைத் தொடர்ந்து பெற்றிடச் செய்தலே ஆகும்" என்று கூறுகிறார்.

வழிகாட்டுதலின் நோக்கம் (Aims of Guidance) :


     i) தனிநபரின் ஆற்றலை வளர்ச்சியடையச் செய்தல்.

     ii) தேவை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளச் செய்தல்.

     iii) ஒருவர் தன்னை பற்றிய மற்றும் தன்னை சுற்றி உள்ளவர்களை பற்றியும் புரிந்து செயல்பட தேவையான தகவல்களை வழங்குதல்.

     iv) சுயநெறிப்படுத்துதல் மற்றும் சுய புத்துணர்ச்சி பெறுவதற்கு உதவுதல்.

     v) சரிபார்த்தல் (Adjustment), ஒழுங்குபடுத்தல் (Orientation),  சுய வளர்ச்சி (Self - Development).

வழிகாட்டுதலின் வகைகள் :

     1. கல்வியியல் வழிகாட்டுதல் (Educational Guidance).
     2. தொழில் சார்ந்த வழிகாட்டுதல் (Vocational Guidance).
     3. தனிப்பட்ட வழிகாட்டுதல் (Personal Guidance).
     4. உடல் ஆரோக்கியத்திற்கான வழிகாட்டுதல் (Health Guidance).

அறிவுரை பகர்தல் (Counselling) :


     சிக்கலான நடத்தை கொண்ட மாணவர்களுக்கு அறிவுரை பகர்தலே பயனளிக்கும்.

     அறிவுரை கூறுபவருக்கும் அறிவுரை பெருபவருக்கும் இடையே தனியாக நிகழும் கலந்துரையாடலே அறிவுரை பகர்தல் எனப்படும்.

     ஒளிவு மறைவு இன்றி திறந்த மனதுடன் கருத்துகளை பரிமாறி கொள்வது ஆகும்.

சான்று:
     i) வழக்கறிஞர் - அவரது கட்சிக்காரர்.
     ii) மருத்துவர் - நோயாளி.

அறிவுரை பகர்தல் வரையறை :


     கார்ல் ரோஜர்ஸ் (Carl Rogers), "அறிவுரை பகர்தல் என்பது தொடர்ச்சியான நேர்முகத் தொடர்புகள் மூலம் ஒருவனது மனப்பான்மையையும் நடத்தையையும் மாற்றி அமைத்தல்"  என்று வரையருக்திறார்.

அறிவுரை பகர்தல் முறைகள் :


     i) நேரடி அறிவுரை பகர்தல்  (Directive Counselling).

     ii) மறைமுக அறிவுரை பகர்தல் (Non - Directive Counselling).

     iii) தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவுரை பகர்தல் . (Eclectic Approach in Counselling).


0 கருத்துகள்

Recent posts

முதுமை (Muthumai) தமிழ் சிறுகதை, Tamil Short Stories