பின் தங்கிய குழுக்களுக்கான கல்வியியல் தேவைகள் (Education needs of disadvantaged groups)

சமூக அமைப்பு (Social Structure) :

     சமூக அமைப்பு என்பது, ஒரு நாட்டில் பல்வேறு விதமான வாழ்க்கை முறையைக் கொண்டு வாழும் மக்களின் வாழ்வியல் பிரிவு முறையாகும். ஒரு நாட்டின் சமூக அமைப்பே அந்நாட்டின் அடயாளமாக திகல்கிறது. இந்தியாவில் சமூக அமைப்பானது மதம்(Religion), இனம்(Caste), பழங்குடியினர்(Tribes), பாலினம்(Gender) என பிரித்து அமைக்கபட்டுள்ளது. 

சமூக அடுக்கமைவு (Social Stratification) :

     சமூக அடுக்கமைவு என்பது ஒரு நாட்டில் வாழும் மக்களின் இருப்பிடம், கல்வி, வருமானம் மற்றும் சொத்து மதிப்பிணை கொண்டு கட்டமைக்கப்படும் ஒரு சமூக கட்டமைப்பு முறை ஆகும். இந்தியாவில் சமூக அடுக்கமைவானது வகுப்பு(Class), சமூக வகுப்பு (Community Class) என பிரித்து அடுக்கபட்டுள்ளது. 

வகுப்பு (Class);

     மக்களின் வருமானம், தொழில் மற்றும் திறன்  ஆகியவற்றின் மூலம் அவரது வகுப்பு பிரிக்கப்படுகிறது. ஒடுக்கபட்டவர்(Oppressed), கீழ் வர்க்கம்(Lower class), கீழ் நடுத்தரம்(Lower middle class), மேல் நடுத்தரம்(Upper middle class), உயர்ந்தோர்(Upper class) மற்றும் மிக உயர்ந்தோர்(High class) என பல பிரிவுகளாக பிரித்து ஒன்றான மேல் ஒன்றாக கீழிருந்து மேல்நோக்கி அடுக்கபட்டுள்ளது. 

சமூக வகுப்பு ( Community Class ) ;

     சாதியின் அடிபடையில் பிரிக்கபட்ட மக்கள் குழுவின் வாழ்வியல் முறை, கல்வி, வருமானம், தொழில் மற்றும் சொத்து மதிப்பு ஆகியவற்றின் அடிபடையில் பிக்கபட்டுள்ள ஒரு முறையே சமூக வகுப்பு ஆகும் . இது முறையே பொது(General), இதற பிற்படுத்தபட்ட வகுப்பினர்(Other backward class), பட்டியல் சாதியினர்(Scheduled castes) மற்றும் பட்டியல் பழங்குடியினர்(Scheduled tribes) என பிரிக்கபட்டுள்ளது.

பின்தங்கிய குழுக்கள் (Disadvantaged Groups) :

i) பட்டியல் சாதியினர் (SC). 
ii) பட்டியல் பழங்குடியினர் (ST). 
iii) பெண்கள் (Women). 
iv) மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டோர் (Mentally and Physically challenged groups). 

     இந்தியாவில் இத்தகைய நான்கு குழுவினரே பின்தங்கிய குழுக்கள் என அழைக்கின்றனர். இந்திய அரசு மற்றும் தமிழக அரசானது இத்தகைய பின்தங்கிய குழுக்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்க பலத்திட்டங்களை நடைமுறைப்படுதியுள்ளது. இத்தகைய பின்தங்கிய குழுக்களுக்கு கல்வியை சேர்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை ஊக்கபடுத்த முடியும் என நம்பியது. 

பட்டியல் சாதியினர் (Scheduled Castes) :

     சமூகத்தில் பிற சாதியினரால் மிகமும் ஒடுக்கப்பட்ட  சாதியினரை பட்டியல் சாதியினராக குறிப்பிட்டுள்ளனர். இந்திய மக்கள் தொகையில் 16% பட்டியல் சாதியினர் இடம்பெற்றுள்ளனர். பழங்கால ஆட்சியில் பட்டியல் சாதியினர்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளது. 

     இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அனைவருக்கும் இலவச கல்வியும் அனைத்து சாதியினருக்கும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என சட்டம் வெளியானது. இதன் மூலம் பட்டியல் சாதியினர் கல்வி கற்கும் வாய்ப்பு உருவானது.

பட்டியல் சாதியினரின் கல்வி தேவைகள் :

     சமூகத்தில் பகுத்தறிவுடன் செயல்பட கல்வி ஒரு அடிப்படை தேவையாகும். மக்கள் பிறப்பால் வேறுபாடு பார்பதை சரி செய்தலுக்கு கல்வி மிகமும் அவசியமான ஒன்றாகும். பட்டியலின குழந்தைகளும், பெண்களும் அடிமை நிலையில் இருந்து விடுபட கல்வி ஒரு முக்கிய தேவையாக கருதப்படுகிறது. மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் கல்வி அறிவு பெற்றிருப்பது அவசியமாகும்.

பட்டியல் சாதியினரிடம் கல்வியால் ஏற்பட்ட மாற்றங்கள் :

     அடிமைபடுதப்பட்ட மக்களின் குழந்தைகள் கல்வி கற்றதால் தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றனர்.  கல்விக்கற்ற ஒடுக்கப்பட்ட சாதியினர் அரசு வேலையில் நியமிக்கப்பட்டனர். 

     இந்திய அரசியலமைப்பு சட்டதில் பட்டியல் சாதியினருக்கு 18% இட ஒதிக்கேடு வழங்கபட்டுள்ளது. இதன் மூலம் பல பட்டியல் சாதியினர் உயர்ந்த நிலையை அடைந்தனர். அடிமையாக இருந்த பட்டியல் இன சாதியினர் கல்வி கற்று பல்வேறு வழிகளில் மேன்மையடைந்தனர். நாட்டில் சாதிய அடிமைத்தனம் படிப்படியாக குறையத் தொடங்கியது. 

     பட்டியல் இன சாதியினரின் உயற்கவிக்காக அரசு பல்வேறு ஊக்கதவகைகளையும் கல்லோரியில் அவர்களுக்குக்கென தனி இட ஒதிக்கீட்டையும் வழங்கியது. 

     மாணவர்கள் எளிதில் பள்ளிக்கு செல்லும் வாகையில் 5 km இடைவெளியில் அணைத்து நகர் மாற்றும் கிராமப்புரங்களில் தொடக்கப்பள்ளியை அரசு அமைத்தது. 

     கல்வியால் பட்டியல் சாதியினரின் வறுமை ஒழிந்து அவர்கள் வளர்ச்சியாடைய தொடங்கினர். மேலும் பல்வேறு தொழில் செய்ய தொடங்கினர். பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிய தொடங்கினர். 

பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes ) :

     நாட்டில் பிற சமூகத்தினருடன் தொடற்பின்றி தனித்து சிறுக்குழுவாக வாழும் இனத்தவரை பட்டியல் பழங்குடியினர் என்பர். இவர்கள் பெரும்பாலும் நாட்டின் செயல்பாடுகளோடு தொடர்பு அற்றவராகவே இறுப்பர். உணவு உடை தங்குமிடம் என பல்வேறு வாழ்வியல் காரணிகளை அரசாங்கத்தின் உதவியின்றி தாங்களாகவே உருவாக்கிக்கொள்வர். 

     பட்டியல் பழங்குடியினர் பெரும்பாலும் காடுகள், மலைகள், பாலைவனங்கள் போன்ற அரசாங்கத்தால் எளிதில் தொடர்புக்கொள்ள முடியாத இடங்களை சேர்ந்த சிறு சிறு இனத்தவர்களாக உள்ளனர்.  

     சுதந்திர இந்தியாவில் பட்டியல் பழங்கிடியினற்கு கல்வியை சேர்க்க பல முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டது. ஆனால் பல்வேறு பழங்குடியினர் அவரகளுக்கு என தனி தாய்மொழியைக்கொண்டு செயல்ப்பட்டதால் ஆசிரியர்கள் கல்வி கற்பிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

     1986 NPE  கொள்கையின் மூலம் அனைத்து இனத்தவர்க்கும் அவரவர் தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டது. NCF 2005 படி கற்றல் கற்பிதல் துணைகருவிகளை (Teaching Learning Materials ) கொண்டு அவரவர் தாய்மொழியில் கல்வி கற்பித்தல் வேண்டும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதனை நடைமுறைபடுத்தி கண்காணிக்கும் பொறுப்பு DIET  ( மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ) க்கு  வழங்கியது. 

     பழங்குடியினர் இடதில் பள்ளியை அமைத்து அங்கு ஆசிரியர்களை தங்க வைத்து கல்வி கற்பிதலில் மிகவும் சிரமம் இருந்தது. இதற்காக அரசு தனிபட்ட நிதியை ஒதுக்கி செயல்பாட்டினை மேற்கொண்டது. இதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் இல்லம்தேடிக் கல்வி என்னும் முறையினை உருவாக்கி அங்குள்ள மக்களுக்கும் குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வியை கற்பிக்க தொடங்கியது . உயர்நிலை, மேல்நிலை மற்றும் உயற்கல்விக்காக மாணவர்கள் இருப்பிடம் விட்டு வெளியே செல்ல நேரிட்டது, அதற்காக அரசு அவர்கள் தங்க, மாணவர் விடுதிகளை அமைத்து இலவசமாக உணவும் வழங்கியது. 

பட்டியல் பழங்குடியினரிடம் கல்வியால் ஏற்பட்ட மாற்றங்கள் :

     பட்டியல் பழங்குடியினரிடம் பகுத்தறிவு தோன்றியது. அதனால் அவர்கள் அடிமைதனம் படிப்படியாக குறைந்தது. அவர்களதுக் குழந்தைகள் கல்வி கற்றனர். 

     உயர்நிலை,  மேல்நிலை மற்றம் உயர் கல்விகள் என கல்வியை பாடிப்படியாக கர்க்கத் தொடங்கினார். இதன் மூலம் பழங்குடியினர் பல்வேறு தொழில் நிறுவனங்கலில் பணிபுரிய தொடங்கினர். 

     திறன்க்கொண்டவர்கள் தான் கற்ற கல்வியைக்கொண்டு தொழில் புரியத்தொடங்கினார். இதன்மூலம் பழங்குடியின சமூகம் வளர்ச்சியடைய தொடங்கியது.

     இந்திய அரசால் இவர்களுக்கு என ஒதுக்கபட்ட வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு அரசு பணியிடங்களில் கல்வி கற்ற பழங்குடியினர் நியமிக்கப்பட்டனர். 

     மேலும் அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் பற்றியும், அவற்றிக்கான காரணங்கள் பற்றியும் அறிந்து செயல்படுகின்றனர்.

பெண்கல்வி ( Education needs of Women ) :

     நாட்டில் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவதே பெண்கலவியாகும், அத்தகைய பெண் கல்விக்காக நாட்டில் பல்வேறு அறிஞர்கள் போராட்டம் நிகழத்த வேண்டியிருந்தது. பாரதியார், பெரியார் என பல்வேறு முக்கிய அறிஞர்களும் பெண் சுதந்திரதிர்க்காகவும் பெண் கல்விக்காகவும் தன் கருத்துகளை வெளிப்படுதினர். 

பெண்கல்வியின் தேவைக்கான முக்கியத்துவங்கள் : 

1. பெண் சுதந்திரம் ;

     நாட்டில் அனைத்து சாதி, மதத்திலும் அடிமையாக இருந்த பெண்களின் விடுதலைக்கு ஒரு அடிப்படை கருவியாக செயல்பட கல்வி  தேவைபட்டது. பல்வேறு இடங்களில் பெண்கள் வெறும் சமையல் செய்யவும் குழந்தை பெற்றெடுக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். இத்தகைய  நிலையை மாற்ற பெண்கல்வி அவசியமான ஒன்றாகும்.

2. நாட்டின் வளர்ச்சி ;

     இந்திய மக்கள் தொகையில் பாதியை கொண்ட பெண்களின் உதவியின்றி நாட்டினை வளர்ச்சியடைய செய்ய முடியாது. நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய பெண்கல்வி அவசியமாகும். மேலும் ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டில் வாழும் பெண்களின் கல்வி கற்றல் விகிதத்தினையும் சார்ந்தே அமையும்.

3. பாலின சமத்துவம் ( Gender Equality ) ;

     ஒரு நாட்டில் ஆண் பெண் என்ற ஏற்ற தாழ்வின்றி செயல்பட வேண்டும். ஆணுக்கு நிகராக பெண்களும் கல்வி கற்க வேண்டும். அனைத்து துறைகளிலும் ஆண் பெண் என்ற வேறுபாடின்றி பணியாற்ற வேண்டும். 

கல்வி கற்றதால் பெண்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள் : 

     நாட்டில் பெண்களின் அடிமை நிலை ஒழிந்து பெண்கள் சுதந்திரம் பெற்றனர். இதன் மூலம் அனைத்து பெண்களும் கல்விக் கற்கலாம் எனும் நிலை உருவானது. 

     ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி கற்றனர். இதன் மூலம் அரசு பணியிடங்களில் அனைத்து துறைகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டனர்.

     பெண்களுக்கென இந்திய அரசு, அரசு வேலைவாய்புகளில் 33% இடவொதுக்கீட்டினை வழங்கியுள்ளது. இவற்றுள் விதவை பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கபபட்டது. 

     கல்வி கற்ற பெண்கள் பல முன்னணி தனியார் நிறுவங்களில் பணிபுரிய தொடங்கினர். இதன் மூலம் ஒரு குடும்பத்தினை தனித்து நடத்தும் நிலையை பெண்கள் அடைந்தனர். 

மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கபட்டவர்களின் கல்வி தேவைகள் (Education needs of Mentally and Physically challenged groups ) :

     சுதந்திர இந்தியாவின் தொடக்கதில் மாற்று திறனாலிகளுக்கென அவறவர் குறைகளுக்கு ஏற்ப தனி தனியான முறையில் கல்வி கற்பிக்கப்பட்டது. பார்வையற்ற மாணவர்களுக்கு பிரய்லி(Braille) கல்வி முறையின் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது. 

     பின்னர் அனைத்து விதமான மாணவர்களும் ஒரே வகுப்பினுள் அமர்ந்து பாடம் கற்கும் முறை அறிமுகமானது. பார்வை அற்ற மாணவர்கள் தன் செவித் திறன் மூலவும், வாய் பேச இயலாத மாணவர்கள் தன் கண் பார்வை மூலமும், காது கேட்காத மற்றும் வாய் பேச இயலாத மாணவர்கள் பார்வை மற்றும் எழுத்தின் மூலமும் பாடம் கற்கும் முறை அறிவுகப்படுத்தபட்டது. 

     மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வின் போது மற்றொருவரின் உதவியுடன் தேர்வு எழுதும் முறையும் கொண்டுவரப்பட்டது. இதனால் இவர்களும் பிற மாணவர்கள் போலவே கல்வி கற்றனர். 

மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கபட்டவர்கள் கல்வியால் அடைந்த பயன்கள் : 

     சமூகதில் இவர்களுக்கென ஒரு தனிநிலை உருவானது. பிறரின் உதவியின்றி செயல்படும் ஆற்றல் பெற்றனர்.

     இந்திய அரசு மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கபட்டவர்களுக்கு அரசு வேலைவாய்புகளில் 10 % இட ஒதிக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் கல்வி கற்ற மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கபட்டவர்கள் அரசு பணியில் நியமிக்கபட்டனர். 

     அரசானது மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கபட்டவர்கலுக்கென ஒன்று முதல் உயர்கல்வி வரையில் மாதாந்திர கல்வி ஊக்கதொகையினை வழங்கி வருகிறது.

தொகுப்புரை :

     கற்றோர் உலகால்வார் என்னும் திருவள்ளுவரின் கருதிற்கு ஏற்ப இன்றைய சூழ்நிலையில் பல்வேறு பின்தங்கிய குழுவினை சேர்ந்த கல்வி கற்றவர்கள் நாட்டின் ஆட்சி பொறுப்பில்  இருப்பதை காணமுடிகிறது. எனவே கல்வியே ஒருவரை உயர்தும் கருவியாகும் என்பதை அறிவீர்.

0 கருத்துகள்

Recent posts

முதுமை (Muthumai) தமிழ் சிறுகதை, Tamil Short Stories