ஒரு ஊரில் மாலை 6 மணிக்கு பத்து காகங்கள் பறந்து வந்து ஒரு மரத்தின் கிளைகளில் அமர்ந்தன. அமர்ந்த அவை ஒவ்வொன்றும் தான் சென்று வந்த இடத்தை பத்தியும் அங்கு நடந்த நிகழ்வுகள் பற்றியும் கூறி கொண்டன. இது தினந்தோறும் நடந்தது. ஒரு வாரம் நிகழ்ந்த இந்நிகழ்வில் ஒவ்வொரு காகமும் தினம் ஒவ்வொரு இடத்திற்கு சென்று அங்கு நடந்ததைக் கூறின. ஆனால் ஒரு காகம் மட்டும் தினமும் கோவிலில் நிகழ்ந்தவை பற்றியேக் கூறியது. ஒரு வாரத்திற்கு பிறகு அனைத்து காகங்களும் ஒன்று சேர்ந்து பேசும்போது அந்த ஒரு காகத்தை மற்ற அனைத்து காகங்களும் கேட்டது.
ஏன் தினம் ஒரே இடத்தில் நிகழ்வதை பற்றியே கூறுகிறாய்?
நீ மற்ற இடங்களுக்கு செல்ல மாட்டாயா?
எனக்கு வேறு இடம் எதுவும் தெரியாது. நான் ஒரு முறை வேறு இடத்திற்கு சென்ற போது அங்குள்ள மனிதர்கள் என்னை கல்லால் அடித்து விட்டார்கள். அதனால் ஆறு மாதங்கள் என்னால் பறக்க முடியவில்லை. அந்த ஆறு மாதங்களும் நான் அந்த கோவிலில் இருந்ததினால் என்னை யாரும் காயபடுத்தவில்லை. இப்போதுதான் ஒரு வாரமாக பறக்க ஆரம்பித்தேன். அதான் கோவிலினுள் உள்ள இந்த மரத்தின் கிளையில் வந்து அமர்ந்தேன் நீங்களும் வந்து அமர்ந்து பல புதிய விசயங்களை கூறினீர்கள். என்னிடமும் கேட்டீர்கள், நான் இந்த ஆறு மாதம் நான் பார்த்த நிகழ்வுகளை கூறினேன்.
நண்பா நீ இப்பொழுதுதான் பறக்க ஆரம்பித்துவிட்டாய் அல்லவா, இப்போது நீ வெளியில் எங்காவது பறந்து செல்லலாமே?
எனக்கு பயமாக உள்ளது. மீண்டும் என்னை யாராவது கல்லால் அடித்து விட்டால் இம்முறை உயிரே போய்விடுமே. அது மட்டும் இல்லாமல் இங்கு எனக்கு உன்ன உணவு, தங்க இடம், குளிக்க குளம் மற்றும் நண்பர்கள் நீங்களும் உள்ளீர்கள். எதற்காக நான் இங்கிருந்து செல்ல வேண்டும்.
உணவும் இருப்பிடமும் இருந்தால் போதுமா? அறிவு வளர வேண்டாமா?
வெளியுலக நிகழ்வுகள் பற்றி அறிய வேணாமா?
நல்லவை தீயவை பற்றி அறிய வேணாமா?
எங்கு எவ்வாறு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிய வேண்டாமா?
மற்றவர்கள் உடனான தொடர்பு வேண்டாமா?
நண்பா! மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி மனநிலை கொண்டவர்கள் அல்ல. கோவிலினுள் அமைதியாகவும் சந்தோசமாகவும் இருக்கும் இவர்களுக்கும் வெளியில் பல கஷ்டங்களும், கடமைகளும் உள்ளது. கோவிலினுள்தான் எனக்கு நிம்மதிக் கிடைக்கிறது என்று அவர்கள் இங்கேயே தங்கி விடுவது இல்லயே. இவர்களிங்கு வருவதே நம்பிக்கயை பெறுவதற்காக மட்டுமே. வெளி உலகில் அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்ற நம்பிக்கையை பெறுவதற்காக மட்டுமே. மற்றபடி அங்கு அவர்கள் நன்றாக வாழ்வதும் வாழாமல் போவதும் அவர் அவர் செயல்களில் மட்டுமே உள்ளது. ஒரு நாள் வந்து நம்பிக்கை பெற்று ஒரு மாதம் அவர்கள் வெளி உலகில் வாழும் போது நீ ஆறு மாதம் இங்கேயே இருந்துல்லாய் உண்ணல் கண்டிப்பாக வெளி உலகில் வாழ முடியும்.
அமைதியாக யோசித்து கொண்டு இருந்தது அந்த கோவில் காகம். ஆம் மற்ற அனைத்து காகங்களும் அந்த காகத்திற்கு இட்ட பெயரே கோவில் காகம். மற்ற காகங்கள் எல்லாம் தன் இருப்பிடத்திற்கு சென்றதும், ஒரு முடிவினை எடுத்த அந்த கோவில் காகம் அந்த கோவில் மரத்தில் இருந்து பறந்து வெளி உலகினை கானச்சென்றது.
வெகு தூரம் சென்ற காகம் ஓய்விற்காக ஒரு உயரமான இடத்தில் அமர்ந்தது. அமர்ந்த சிறு நேரத்திலே அந்த காகம் தூங்கி விட்டது. காலை விடிந்ததும் சூரிய ஒளி கண்ணை கூச நீல நிறம் தன் கருமையான உடலை மறைப்பது போன்று தோன்றியது. தெளிவாக பார்த்த அந்த காகம் சுற்றி அனைத்து இடங்களும் நீல நிறமாக இருப்பதை கண்டது. அந்த நீல நிறதின் பரவலின் மேல் மிதக்கும் எதோ ஒன்றின் உட்சியல் தான் இருப்பதை உணர்கிறது.
என்ன செய்வது என்று அறியாமல் அந்த காகம் அங்கு இருந்து பறந்து செல்கிறது. எவ்வளவு தூரம் பறந்தாலும் எங்கும் நிலம் தெரியவில்லை. காகதால் வெகு தூரம் பறக்க முடியவில்லை சோர்வுற்ற காகம் அங்கேயே வட்டமடித்து பறந்தது. அங்கு ஓய்வெடுக்க நெனைத்த காகம் கீழே இறங்கியது. கீழே வந்த அந்த காகம் மிகவும் பயதுக்குள்ளாகியது.
அய்யோ! இது என்ன கீழே நீராக உள்ளது. எங்கு பார்த்தாலும் நீராக உள்ளதே, ஆகா! அப்போ இதுதான் கடலா. கடல் மிகவும் ஆபத்தானது என்று மனிதர்கள் சிலர் பேசுகையில் கேள்வி பட்டேன் இப்போது நான் என்ன செய்வேன். என்னால் இவ்வாறு பறந்து கொண்டே இருக்க முடியாது.
சுற்றி பார்த்த அந்த காகம் தூரத்தில் எதோ ஒன்று தெரிவதை கவனித்தது. ஆம் அதுதான் அந்த காகம் கண்விலிக்கையில் அது இருந்த இடம். சிறகுகள் வலி எடுக்கவே வேறு வழி இன்றி அந்த காகம் அந்த இடத்திற்கு மீண்டும் பறந்துச் சென்று அமர்ந்தது.
என்ன நடந்தது? நான் எப்புடி இங்கு வந்தேன்? இங்கு இருந்து நான் எவ்வாறு நிலத்திற்கு செல்வது? நான் இப்போது என்ன செய்வேன்? என்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா? ஆறு மாதங்களாக கோவிலில் எந்த ஒரு கவலையும் இன்றி இருந்தேனே. இப்போது ஏன் இவ்வாறு நடந்தது. இனி நான் எவ்வாறு என் நண்பர்களை காண்பேன்? யாராவது என்னை காப்பாற்ற வருவார்களா?
இவ்வாறு பல்வேறு எண்ணங்களும் கேள்விகளும் காகதின் மனதிற்குள் ஓடியது. இரவு என்ன நடந்தது என்று பார்க்கலாம். கோவிலில் இருந்து வெளியே பறந்து சென்ற காகம் தன் ஓய்விர்க்காக ஒரு இடத்தின் உட்சியில் அமர்தது அல்லவா அது ஒரு கப்பலின் பாய்மரத்தை கட்டும் கம்பம்.
காகாவின் நேரம், அந்த கப்பல் விடிவதற்குள்ளையே அங்கு இருந்து இரவோடு இரவாக கடலுக்குள் சென்று விட்டது. காகம் மிகம் சோர்வுடனும், அதன் சிறகுகள் சரியாகி ஒரு வாரமேயாகி உள்ளதாலும் மேலும் அது ஆறு மாதங்கள் இரவில் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி கோவிலில் தூங்கியதாலும், அதனால் சுற்றி என்ன நிகழ்கிறது என்று அறிய முடியவில்லை. காலை விடிந்த பிறகு அந்த கப்பல் நிலத்தை விட்டு வெகு தூரம் வந்து விட்டது.
ஆகா உணவு, அய்யோ என்ன இது அந்த உணவு அந்த மனிதன் கையில் இருக்கிறதே இப்போது நான் எப்படி அதை உண்பது. இந்த கடலிலும் எனக்கு தேவையான உணவு கிடைக்காதே.
பசியோடு இருந்த அந்த காகம் அந்த கப்பலில் கேப்டன் கையில் இருக்கும் உணவினை பார்க்கின்றது. மிகுந்த பசியில் இருந்ததால் அதை எவ்வாறாவது உண்ண வேண்டும் என எண்ணியது. யோசித்தும் விடை கிடைக்காததால் இறுதியாக உணவினை திருட எண்ணுகிறது. நினைத்த சில நொடிகளில் காகம் கப்பல் தலைவரிடம் இருக்கும் உணவினை திருட, பருந்தை கண்ட சிட்டினை போல விரைந்து பறந்தது.
கப்பலின் பாய்மரத்தை பார்த்துக் கொண்டு இருந்த கேப்டன், அதன் உட்சி கம்பதில் இருந்து ஒரு காகம் தன்னை நோக்கி பறந்து வருவதை காண்கிறார்.காகம் தன் கையில் இருக்கும் உணவிற்காகத்தான் வருகிறது என்று உணர்ந்த கேப்டன் தன் கயில் இருக்கும் உணவினை காகத்தை நோக்கி நீட்டுகிறார்.
இதை பார்த்த காகம் திடீரென நின்றது. காகம் கேப்டன் பக்கத்தில் வந்து அமர்ந்தது. திருட வந்த காகம் தான் செய்ய நினைத்த செயலை நினைத்து வருந்தியது. தேவர்களும் அரக்கற்களும் கடலை கடைந்து எடுத்த அமிர்தத்தை இந்திரரே காகத்திற்கு வழங்குவது போல எண்ணி வியப்புடன் நின்றது.
இந்த உணவு உனக்குத்தான் நீ சப்பிடுவாயாக. இதை திருடத்தானே விரைந்து பறந்து வந்தாய், நானே உனக்கு தருகிறேன் உண்பாயாக. இந்த கடலில் வேறு எங்கும் உனக்கு உணவு கிடைக்காது, இதை உண்டு விடு இல்லையெனில் நானே உண்டு விடுவேன் என்றார்.
இதை கேட்ட காகம் அவர் கொடுத்த உணவினை உண்டது. உணவினை உண்ட பின் அந்த காகம் மீண்டும் பறந்து சென்று கம்பதின் உட்சியிள் அமர்ந்தது. மாலை வேலையில் மீண்டும் காகதிர்க்கு பசி எடுக்கவே அது மீண்டும் கேப்டன் உணவு வழங்கிய இடத்தில் வந்து அமர்ந்தது. ஆனால் இம்முறை வேறு ஒரு மாலுமி அங்கு கையில் உணவோடு வந்தார். இதை கண்ட காகம் உடனடியாக அங்கு இருந்து பறந்து சென்று மறைந்து கொண்டது. வெளியே வந்த மாலுமி உணவினை அங்கு வைத்து விட்டு கா... கா... என கத்தினார். இதை கேட்ட காகம் அவரிடம் பறந்து வந்தது.
நீந்தான் கேப்டன் சொன்ன அந்த காகமா. உனக்குத்தான் அவர் உணவு கொடுத்தார், இந்தா இதை சாப்புடு. நீ எவ்வாறு இங்கு வந்தாய் கப்பல் தரைக்கு போக ஒரு மாதம் ஆகும். அதுவும் புறப்பட்ட இந்த நிலத்திற்கு திரும்ப வருவதற்கு ஆறு மாதங்கள் ஆகுமே. நீ அதுவரை கப்பலில் இருப்பாய என்ன?
உணவிற்கு நன்றி கூறும் வகையில் காகம் அதன் தலையை அசைத்தது. காக்கா உணவினை உண்டுக் கொண்டு இருக்கும் போது மாலுமி கூறியதை கேட்டு மனம் குழம்பியது.
பறக்க முடியாமல் ஆறு மாதங்கள் கோவிலில் இருந்தேன். இப்போது பறக்க முடிந்தும் ஆறு மாதங்கள் கப்பலில் இருக்கும்படி ஆனதே. நடப்பவை நடகட்டும் என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடலாம்.
இவ்வாறு எண்ணிய காகம் தனக்குள் மன தைரியத்தை வரவழைத்துக் கொண்டு. மாலுமி வழங்கிய உணவினை உண்டது. உணவினை உண்ட பின் மீண்டும் காகம் கம்பதின் உட்ச்சியில் சென்று அமர்ந்து தூங்கியது.
இரவில் திடீரென எழுந்த காகம் சுற்றி பார்த்தது. அப்போது தூரத்தில் இதை போன்று ஒரு கப்பல் மிகவும் பிரகாசமான ஒளியுடன் தோன்றியது. காகம் மிகுந்த ஆவலுடன் அந்த கப்பலை நோக்கி பறந்து சென்றது. அந்த கப்பலை காகம் நெருங்க நெருங்க காகத்திற்கு ஒரு கொடிய நிகழ்வு தெரிகின்றது. இரவில் சூரியன் பூமிக்கு வந்து தன் முன்னே நெருப்பை கக்குவது போன்று இருந்தது. அந்த கப்பலின் கம்பதில் அமர்ந்த அந்த காகம் கப்பலினை பார்த்த போது.
அய்யோ! என்ன இது? இங்கு என்ன நடக்கிறது?
கப்பலினை சுற்றி சிறு சிறு படகுகள் நின்றது. அந்த சிறு படகினில் இருந்து வந்த ஒருவன் கப்பலின் மரு முனையில் தீயிட்டான். அந்த கப்பல் ஏற்கனவே தீ பற்றி எரிந்து கொண்டு இருந்தது. கப்பலின் கேப்டன் அறையுள் இருந்து பலபேர் வெளியில் வந்தார்கள். அவர்கள் பல மூட்டைகளை கையில் எடுத்துக் கொண்டு அந்த சிறு படகில் வீசினர். மேலும் பல பொருள்கள் அந்த சிறிய படகுகளில் இருந்தன.
கப்பலின் மாலுமிகள் யாரையும் காணவில்லையே. கப்பலின் கேப்டனை யாரோ ஒருவர் இளுத்து வருகிறாரே. என்ன நிகழ போகிறதோ! அய்யோ! கேப்டன், என காகம் பாவமாக பார்த்தது.
ஆம் அந்த காகம் வருத்தமுறும் வகையிலே அங்கு ஒரு நிகழ்வு நடந்தது. அந்த சிறு படகுகளில் இருந்து வந்தவர்கள் ஒன்றாக சேர்ந்தனர். அதில் ஒருவன் கேப்டனை அவரது அறையில் இருந்து இளுத்து வந்தான். திடீரென மற்றொருவன் அந்த கேப்டனை தனது கையில் இருந்த துப்பாகியின் மூலம் சுட்டான். உடனே மற்றவர்கள் கேப்டனை தூக்கி கடலில் வீசினார்கள். இதை கண்ட காகம் மிகவும் பயந்துப்போனது.
அந்த கப்பலில் இருந்தவர்கள் எல்லாம் அந்த சிறு சிறு படகுகளில் இரங்கி அங்கு இருந்து சென்றனர். காகத்திற்கு என்ன செய்வது என தெரியாமல் வருத்தத்துடனும் பயத்துடனும் இருந்தது. திடீரென கப்பலில் தீயானது கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. கப்பலின் கீழ் இருந்த தீ விறு விறு என கப்பலின் கப்பதின் மூலம் மேல் நோக்கி வந்தது. தீயின் அனல் தாங்க முடியாமல் காகம் அங்கு இருந்து பறந்தது. காகம் பறந்த சில நேரங்களில் அந்த கப்பல் கடலினுள் மூழ்கியது. என்ன செய்வது என தெரியாமல் இருந்த காகம் சுற்றி பார்த்தது தூரத்தில் அந்த காகம் வந்த கப்பல் தோன்றியது. விரைவாக அங்கு நோக்கி பறந்து சென்று, அந்த கப்பலின் கம்பதில் அமர்ந்தது.
காகம் கண்ட காட்சிகள், காகத்தை இரவில் தூங்கவிடவில்லை. பகல் விடிந்தது கப்பலில் அனைவரும் அவரவர் வேலையை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த கப்பலின் கேப்டன் காகத்திற்கு உணவு கொண்டுவந்து வைத்து விட்டு சோகமா அருகில் அமர்ந்தார். காகம் உணவினை உண்ண அங்கு வந்து அமர்ந்தது. அப்போது கேப்டன் மற்ற மாலுமிகளுக்கு ஒரு செய்தியை கூறினார்.
இரவு நான் ஒரு காட்சியை கண்டேன்.நேற்று நமக்கு அறுகாமயில் வந்துக் கொண்டிருந்த கப்பல் கடல்க்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டத்தை கண்டேன். என்னால் எந்த ஒரு உதவியும் செய்ய இயலாதத்தை நினைத்து நினைத்து இரவில் தூங்குவற்கு முடியவில்லை. ஒரு வேளை(காலம்) வரும் இரவு நேரங்களில் நமது கப்பலில் இவ்வாறு தாக்குதல் நடந்தால் நீங்கள் அனைவரும் பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு கடலில் குதித்து தப்பித்து விடுங்கள். என்னை பற்றி கவலைக் கொள்ள வேண்டாம். கப்பலின் மாலுமிகளை காப்பாதே ஒரு சிறந்த கேப்டனுக்கு மரியாதை ஆகும்.
கேப்டன் கூறியதை கேட்ட கப்பலின் மாலுமிகள் சிலர். எந்த கடல் கொள்ளையர்கள் வந்தாலும் நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம் அனைவரும் உங்களோடு இணைந்து சண்டயிடுவோம். நாங்கள் வீட்டிலிருந்ததை விட இந்த கப்பலில்தான் அதிக காலம் இருந்துள்ளோம். நாங்கள் எப்போதும் உங்களையும் இந்த கப்பலையும் விட்டு கொடுக்க மாட்டோம் என கூறினர்.
இதை கேட்ட காகம் அதற்கு சரி என கூறும் வகையில் கா... கா... என கத்தியது.
இதோ உங்களது புது தோழரும் அதைத்தான் கூறுகிறார் போல என்று மலுமிகளில் ஒருவர் கூறி சிரித்தார்.
கேப்டனும் காகத்தை பார்த்தார் காகம் உணவினை உண்ட பின்பும் அங்கு இருந்து பறக்காமல் இருந்ததை கண்டார். இம்முறை காகம் பறக்காமல் இருப்பதைக் கண்டு வியந்தார்.
அனைவரும் பாதுக்காப்பு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள் எந்நேரம் வேண்டுமானாலும் கடல் கொள்ளயர்கள் நம்மை தாக்கலாம். நமது கப்பலை நாம்தான் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கேப்டன் கூறியதும் அனைத்து மாலுமிகளும் நம்பிக்கை பெற்றனர். காகமே நீ கவலை படாதே உனக்கு ஒன்றும் ஆகாது என கப்பலின் கேப்டன் காக்கத்தை பார்த்து கூறினார்.
இதை கேட்ட காகத்தின் பயம் விளகியது, புதியதாக தயிரியம் தோன்றியது. கடவுளே மனித உருவில் என்னை காப்பதாக கூறுவது போல காகத்திற்கு தோண்றியது. காகம் அங்கிருந்து பறந்துச் சென்று பாய்மரம் கட்டும் கம்பதின் உட்ச்சியில் அமர்ந்தது.
இரவு அனைவரும் விழித்திருந்து கப்பலை சுற்றி கண்காணித்துக் கொண்டு இருந்தனர். நேரம் ஆக ஆக ஒவ்வொருவராக தூங்கினர். இரவு 2 மணி இருக்கும் கேப்டன் மற்றும் காகத்தை தவிர மற்ற அனைவரும் தூங்கி விட்டனர். காகம் நேற்று இரவு கண்ட காட்சியால் அது தூங்கவில்லை. காகம் சிறிது சிறிதாக தூங்க தொடங்கியது. திடீரென எழுந்த காகம் கப்பலை சுற்றி பார்த்தது கப்பல் எங்கும் தீ பற்றி எரிந்துக்கொண்டு இருந்தது.கப்பலின் கேப்டனை யாரோ கடலில் வீசுவது போன்று இருந்தது பயத்தினால் காகம் கத்திக்கொண்டே தூக்கத்தில் இருந்து எழுந்தது.
அய்யோ! என்ன இது கனவா நெனவா? கப்பலில் எங்கும் தீ இல்லை. கப்பலின் கேப்டன் இங்குதான் உள்ளார். அப்படியென்றால் இது கனவுதான்.
சுற்றி பார்த்த காகதிற்கு தூரத்தில் எதோ ஒரு சிறு கப்பல் வருவது தெரிந்தது. கப்பலை விட்டு உயர பறந்த காகம் கப்பலை சுற்றி அனைத்து திசைகளிலும் பார்த்தது. கப்பலை சுற்றி நான்கு திசைகளிலும் சிறு சிறு படகுகள் வருவது தெரிந்தது. உடனடியாக காகம் கேப்டனிடம் வந்தது. கேப்டன் நன்றாக தூங்கி விட்டார். என்ன செய்வது எனத் தெரியாமல் காகம் கொலம்பியது.
அவர்கள் இங்கு வந்து விட்டால் அனைவரையும் கொன்று விடுவார்களே! கப்பலை அழித்து கடலில் மூழ்கிவிட செய்வார்களே! இப்போது என்ன செய்வது? படகுகள் நெருங்கி வந்து கொண்டு இருக்கிறதே!
பயதில் காகம் கா... என கத்தியது. அந்த சத்தம் கேப்டனை சற்று கேப்டனை அசய செய்வதை காகம் கவனித்தது. காகம் மீண்டும் கா... கா... என கத்தியது. இம்முறை கேப்டன் தூக்கம் சற்று களைவதை காகம் கவனித்தது. காகம் மீண்டும் மீண்டும் சத்தமாக கா... கா... என கத்திக்கொண்டே இருந்தது. காகத்தின் சத்தம் கப்பலின் கேப்டனை எழச்செய்தது.
எழுந்த கேட்டன் காகம் பயத்துடன் இறெக்கயை அடித்துக்கொண்டு சத்தமிடுவதை பார்த்தார். பயத்துடன் எழுந்து சுற்றி பார்த்தார். ஒரு திசையில் படகு வருவதை கண்டார். எல்லா திசைகளிலும் சுற்றி பார்த்தார் கப்பலை சுற்றி நான்கு திசைகளிலும் படகுகள் வந்துக்கொண்டு இருந்தது. கேப்டன் உடனடியாக மாலுமிகளை எழுப்பினார். சத்தமில்லாமல் அனைவரையும் ஆயுதங்களை எடுத்து கொண்டு தயார் ஆகுங்கள் என்று கூறினார். கப்பலில் எரிந்து கொண்டு இருந்த விளக்குகளை அணைத்தார். சில விளக்குகள் தானாகவே அணைந்து இருந்தது. மாலுமிகளும் கேப்டனும் தயார் நிலையில் இருந்தனர்.
சிறு சிறு படகுகள் கப்பலின் அருகில் வந்தது. கப்பலின் நான்கு திசைகளிலும் கொக்கியுடன் கூடிய கயிர்கள் வீச பட்டன. அந்த கொக்கிகள் கப்பலின் ஒரு பகுதியை இறுகி பிடிக்க அந்த கொக்கியின் கயிற்றினை பிடித்து கடல்கொள்ளையர்கள் ஏறினர். ஒரு படகுக்கு இரு கொள்ளையர்கள் என இருந்தனர்.
கப்பலில் மாலுமிகள் ஒவ்வொருவரும் கப்பலின் அனைத்து பகுதிகளையும் கண்காணித்து கொண்டு இருந்தனர். கயிற்றுடன் இணைக்கப்பட்ட கொக்கிகள் கப்பலில் விழும்போது அனைவரும் தயாரானார்கள். அனைவரும் கேப்டனின் உத்தரவிர்க்காக காத்து இருந்தனர். மாலுமிகள் ஒவ்வொருவரின் கையிலும் சிறிய துப்பாக்கிகள் இருந்தது. தன் கப்பலை காக்க கேப்டன் முன்னேற்பாடாக தற்காப்பு ஆயுதங்களை வைத்திருந்தார். அவற்றை அனைத்து மாலுமிகளுக்கும் வழங்கினார். கேப்டனும் கையில் துப்பாக்கியுடன் தயாராக இருந்தார்.
காகம் கப்பலில் கம்பத்தின் உட்சியில் அமர்ந்து கொண்டு கொள்ளையர்கள் வந்து விட்டார்களா என பார்த்து கொண்டு இருந்தது. காகம், இவர்கள்தான் நேற்று பார்த்த அந்த கொள்ளையர்களா என்பதை உறுதி செய்துக்கொண்டது.
கொள்ளையர்கள் கப்பலின் பாதிக்கு ஏறி வந்துவிட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் கையிலும் ஆயுதம் இருந்தது. கேப்டன் காகத்தை பார்த்தார் காகம் தன் இரு றெக்கயையும் மேல் தூக்கியது. கேப்டன் அதை பார்த்தவுடன் அவரும் தயாரானார். கேப்டன் தன் கையை மேல்நோக்கி தூக்கிவிட்டுக் கீழிறக்கினார். அந்த சைகயை பார்த்ததும் அனைத்து மாலுமிகளும் தயார் ஆனார்கள்.
ஒவ்வொரு மாலுமியின் முன்பும் ஒரு கொக்கி மாட்டப்பட்டு அதன் மூலம் இரு கடல் கொள்ளையர்கள் கப்பலின் மீது எரிகொண்டு இருந்தார்கள். கொள்ளையர்கள் கப்பலின் மேல்புறதிர்க்கு வந்துவிட்டனர். அவர்களது கை ரெண்டையும் கப்பலின் மேல் வைத்தனர். கப்பலின் மீது தாவி குதிக்க தயார் ஆனார்கள். மாலுமிகள் கேப்டனின் உத்தரவுக்காக தயார் நிலையில் இருந்தனர்.
காகம் கப்பலின் உட்ச்சியில் இருந்து அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்தது. கொள்ளையர்கள் கப்பலினுள் தாவிக்குதிக்க தயாரான உடன் காகம் தயார் ஆனது. கொள்ளையர்கள் தாவும் நேரத்தில் காகம் கா... கா... என கதியாது. அடுத்த நொடியே அனைவரது துப்பாக்கியில் இருந்தும் கடும் சத்ததுடன் குண்டானது துப்பாக்கியில் இருந்து புறப்பட்டு கொள்ளையர்களின் நெஞ்சினில் பாய்ந்தது. அனைத்து மாலுமிகளும் ஒரே நேரத்தில் சுட, ஒரே நேரத்தில் கப்பலினுள் தாவி குதிக்க காத்திருந்த கொள்ளையர்கள் பாதிபேர் உடலில் குண்டு பாய்ந்தவுடன் புல் நுனிமேல் நீர் போல் கடலினுள் விழுந்தனர்.
உடனடியாக காகம் மீண்டும் கா... கா... என சத்தமிட கையில் இருந்த துப்பாக்கியில் அனைவரும் வேறு குண்டினை இட்டனர்.
துப்பாக்கியில் குண்டு மாற்றபடும் சத்தத்தை கேட்ட மீதமுள்ள கொள்ளையர்கள் விறு விறு என கப்பலில் ஏறினார்கள். இம்முறை கொள்ளையர்கள் தன் உடலை முதலில் மேல் கொண்டு வராமல் துப்பாக்கியை முதலில் மேல் வைத்து அங்கும் இங்குமாக சுட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத மாலுமிகள் என்ன செய்வது என தெரியாமல் ஒவ்வொருவரும் ஒரு ஒரு இடத்தில் மறைந்து கொண்டனர். கொள்ளையர்கள் சுட்டதில் மாலுமிகள் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.
அனைவரும் மறைந்துக் கொள்ளுங்கள் என கேப்டன் கத்தினார். கொள்ளையர்களின் துப்பாக்கியில் குண்டுகள் முடிந்தது. அவர்களும் வேறு குண்டுகளை துப்பாக்கியில் இட்டனர்.
இதை பார்த்த காகம் மீண்டும் கா... கா... என கத்தியது. அதை கேட்டதும் கேப்டன் 'உடனடியாக தாக்குங்கள்' என கத்தினார். அனைத்து மாலுமிகளும் மறைந்த இடம் விட்டு வேகமா வெளியே வந்து கப்பலில் தொங்கி கொண்டு இருந்த கொள்ளையர்களை பார்த்து துப்பாக்கியை அவர்கள் முன் வைத்து சுட்டனர். மாலுமிகள் அனைவரது கண்ணிலும் கடும் கோபம் தெரிந்தது.
மாலுமிகளின் கண்ணை பார்த்த கொள்ளையர்களுக்கு கடவுளே கோவம் கொண்டு தங்களை தண்டிப்பது போன்று தோன்றியது. அனைவரது உடலிலும் குண்டு பாய்ந்து கடலினுல் விழுந்தனர்.
காகம் உடனடியாக கம்பதை விட்டு பறந்து கப்பலை சுற்றி பறந்து கொள்ளையர்கள் யாராவது கப்பலோடு இருகிறார்களா என பார்த்தது. கொள்ளையர்கள் யாரும் கப்பலில் இல்லை என்பதை உறுதிசெய்துக் கொண்டது.
காகம் கேப்டனிடம் வந்தது. கேப்டன் உடனடியாக கப்பலை அங்கு இருந்து வேகமா செலுத்தினார். மாலுமிகள் அனைவரும் ஒன்று கூடினர். காயம் ஏற்பட்ட மாலுமிகளுக்கு மற்றவர்கள் முதலுதவி பண்ணினார்கள். அவர்களது உடலில் காயம் பெரியப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
கேப்டன் காகத்தை பார்த்து, "நன்றி, நீயே இன்று எங்களை காப்பற்றினாய். சரியான நேரத்தில் எங்களை தூக்கத்தில் இருந்து எழச்செய்தாய். மேலும் சரியான நேரத்தில் கொள்ளையர்களை வீழ்த்த ஒலியின் மூலம் வழிநடத்தினாய்" என்று கூறினார்.
ஆம் ஆம் காகமே இன்று நம்மளை காத்தது. காகத்திற்கு ஒரு நன்றி. இந்த காகம் நான்கு திசைகளையும் ஒரே நேரத்தில் பார்த்து சரியான நேரத்தில் தக்குதல் உத்தரவு வழங்கியது மிகவும் சிறப்பான செயலே. கொள்ளையர்கள் பெரும் சத்தத்துடன் சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட போதிலும் காகம் பறந்து செல்லாமல் இருந்தது வியக்கவைக்கிறது. காகத்தின் தைரியம் மிகவும் பராட்டுகுறியதே. இவ்வாறெல்லாம் காகத்தை பார்த்து மற்ற மாலுமிகள் கூறினர்.
இருந்த இடம் விட்டு வெளிவர பயந்த காகம் இன்று வெகுதூரம் வந்ததுள்ளது. மனிதர்களை கண்டு பயந்த காகம் இன்று பல மனிதர்களுக்கு நண்பனாகிவிட்டது. சிக்களுக்கு தீர்வு காண இயலாத காகம் இன்று கப்பலின் கேப்டனுக்கும் மாலுமிகளுக்கும் தக்க சமயத்தில், அவர்களின் சிக்கலை தீர்க்க உதவியது. பயம் உங்களை ஒரு முட்டாளக்கிவிடும், பயமின்றி செயல்படுபவனே புகழை தன்னுடையதாக்குவான்.
*--- ரௌத்திரம் பழகு ---*
"அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அறுந்துனையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியெண்றே போற்று."
~ கா.ப.செய்குதம்பிப் பாவலர்.
0 கருத்துகள்