நீரின்றி தீர்ந்த தாகம் (Neerindri Theerntha Thaagam) , குழந்தைகளுக்கான கதைகள்

      சூரியன் ஒளிவீச மிகுந்த பிரயத்தனப்பட்டு மூடிய கண்களை திறக்கின்றேன். தெளிந்த நீல வானம், ஒரே அமைதி, ஒரு தேநீர் இருந்தால் நன்றாக இருக்குமே என எழுந்து அமர்ந்து சுற்றி பார்க்கிறேன். தரையில் சிலர் இருபுறமும் வீழ்ந்து கிடக்கின்றனர். இவர்கள் யாரையும்  எனக்கு தெரியாது இவர்களின் ஆடை பார்க்க கடற்கொள்ளையர்போல் உள்ளது. எழுந்து திரும்பி பார்க்கிறேன் ஐயோ.. பேய்! இல்லை இல்லை கிழிந்து தொங்கும் பாய்மரம். கப்பலின் விளிம்பில் சென்று பார்க்கிறேன் அமைதியான நீல கடல் அலைகளே இல்லை. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை நிலமோ மரமோ எதுவும் இல்லை. நான் எப்படி இங்கு வந்தேன்! எதுவும் புரியவில்லை. 


     என்ன இருந்தாலும் நான் இவ்வளவு பெரிய கப்பலை இதுவரை பார்த்ததுக்கூட கிடையாது. அதோ அங்கே சுக்கான் உள்ளது அதற்கு கீழ் ஒருவர் கிடக்கிறார் கப்பலின் கேப்டனாகத்தான் இருக்கவேண்டும். அங்கே சென்று அவரை மெல்ல எழுப்பலாம் என்று அவர் கையை தொடுகிறேன். குளிர்ந்து விறைத்து கிறக்கிறார். நாடிதுடிப்பே இல்லை, அவருக்கு மட்டுமல்ல யாருக்குமே நாடிதுடிப்பு இல்லை. நன்றாக வந்து சிக்கிக்கொண்டேன்.

     எப்படி இங்கிருந்து தப்பிப்பது ஒன்றும் புரியவில்லையே, கப்பலில் இங்குமங்கும் நடக்கிறேன். அதோ சுக்கணுக்கு கீழே திசைமானியும் ஒரு வரைபடமும் இருக்கிறது. திசைமானியை கையிலெடுத்தேன், வடக்கில் மட்டும் நிற்கவில்லை மற்ற எல்லா திசையையும் காட்டிவிட்டது. வரைபடத்தில் பல தீவுகள் வாரையபட்டுள்ளது, ஆனால் கடலில் ஒரு சுழல் அமைபில் குறியிடபட்டுள்ளது.


     ஒருவேளை இந்த இடம்தானா? ஆனால் வெறும் கடல்தானே இருக்கிறது. இங்கு எதை தேடி வந்திருப்பார்கள். வரைபடத்துக்கு பின்புறம் ஏதோ புரியாத மொழியில் எழுதியிருக்கிறது. ஒரு குதிரை படம் கையில் வரையபட்டுள்ளது. நான் அந்த வரைபடத்தை ஆராய்ந்த நேரத்தில் மெல்ல இருட்டிவிட்டதை நான் கவனிக்கவில்லை காற்றும் அலையும் மெல்ல கிளம்புகிறது. பளிச்சென்று ஒரு மின்வெட்டு பேரிடி. இப்போதுதான் புரிகிறது இருட்டு அல்ல புயல் வந்துவிட்டது. எங்கிருந்தோ ஓர் மீன் வந்து கப்பல் தளத்தில் விழுந்து துடிக்கிறது. ஒன்று இரண்டு மீன் மழையாக பொழிகிறது. மீன்மழையிலிருந்து தப்பிக்க  கீழே கிடந்த கேபட்டனின் தொப்பியை எடுத்து தலையில் வைத்துக் கொண்டேன். 


     நல்ல இருள் மீன் மழையோடு நீர் மழையும் சேர காற்று கப்பலை கொண்டு கடலை கடைய தொடங்கியது. ஆம் கப்பல் கடலில் சுற்றுகிறது. வரைபடம் இப்போது புரிகிறது இதுதான் அந்த சுழல் எவ்வளவு பெரிய சுழல் அப்பா! நான் நடுகடலில் சாவபோவது நிச்சயம், அய்யோ! என வீட்டுக்கு கூட தெரியாமல் போய்விடுமே! சுழலுக்கு நடுவில் ஒரு பெரிய பச்சைநிற குதிரை ஒன்று வெளிவருக்கிறது. அது சுழலுக்கு எதிர்புறம் சுற்றுகிறது, இல்லை இல்லை  நீந்துகிறது! இந்த கப்பலைவிட அது பெரிது மிக பெரிது. கப்பல் மெல்ல மெல்ல சுழல் மையத்தை நெருங்குகிறது. அந்த குதிரை மையத்திலிருந்து வெளியே வருகிறது இன்னும் ஒரு சுற்றில் என கப்பளிடம் வந்துவிடும். இதோ வந்துவிட்டது நான் அதன்மேல் தாவமுடிவெடுத்தேன், அருகில் வந்த உடன் தாவிவிட்டேன். 


     நல்லவேளை அதன் பிடரிமயிர்  நன்கு வளர்ந்து தொங்குவதால் அதை பிடித்து ஏற வசதியாக இருக்கிறது. உச்சியை அடைந்துவிட்டேன். கப்பல் சுழல் மையாதுக்கு சென்று மூல்கிவிட்டது. குதிரை சுழலில் இருந்து தப்பித்துவிட்டது. குதிரையோடு இணைந்து நானும் தப்பினேன். சுழல் மெல்ல மறைந்துவிட்டது, இந்த கடற்குதிரை எனக்கு தெய்வம்போல் தெரிந்தது. வேகமா சுற்றிய குதிரை இப்போது நகராமல் நிறக்கிறது. 

     சுழல் சுற்றிய திசைக்கு எதிர் திசையில் குதிரை சுற்றுகிறது. ஏன் இப்படி சுற்றுகிறது, ஐயையோ! சுற்றி சுற்றி இதுவே ஒரு சுழலை உருவாக்கிவிட்டதே. இம்முறை சுழலுக்கு நடுவில் ஓர் குன்று தெரிகிறது. குதிரை சுழலுக்கு உட்புறம் செல்கிறது. நீருக்குள் மூழ்கிவிட்டேன். உடனே கண்ணை இருக்க மூடிக்கொண்டு மூச்சைபிடித்துக்கொண்டு குதிரையின் பிடரியை இருக்கபற்றி சாய்ந்துக்கொண்டேன். 

     வெகு நேரம் ஆனது மூச்சிவிட முடிந்தது, தாகமாகவேறு இருந்தது இதற்குமேல் முடியாது என்று உடனே கண்ணை திறந்தேன். என படுக்கையில் இருந்து திடுக்கிட்டு எழுந்தேன்! தண்ணீர் குடிக்காமலே தாகம் தீர்ந்தது.


இக்கதையை எழுதியவர்,
அபிநயா. கு 

0 கருத்துகள்

Recent posts

முதுமை (Muthumai) தமிழ் சிறுகதை, Tamil Short Stories