படிப்புத்திறன் (Reading Skill) | படித்தல் வகைகள்

மொழிகற்றலில் அடிப்படைத் திறன்கள்:

     ஒரு மொழியை கற்கும்போது அம்மொழி சொற்களை முதலில் கேட்டு அதே முறையில் திரும்ப பேசவும் செய்தல் வேண்டும். பிறகு மேலும் அம்மொழியை கற்க அம்மொழி எழுத்துகளை எழுதும் முறையை கற்க வேண்டும், எழுதிய சொற்களை அம்மொழியின் சொல்முறையில் படித்தல் வேண்டும். இவ்வாறு கேட்டல், பேசுதல், எழுதுதல் மற்றும் படித்தல் ஆகிய நான்கு அடிப்படை திறன்களை கொண்டே ஒரு மொழி கற்பிக்கப்படுகிறது.

படித்தல்:

     அடிப்படை திறன்களில் முக்கியமான ஒன்றான படித்தல் என்பது எழுத்துகளை கண்ணால் பார்த்து வாயால் உசரித்துச் சொல்லிப் பொருள் உணர்வதை படித்தல் எனப்படுகிறது. வரிவடிவத்தில் உள்ள சொற்களை ஒலி வடிவமாக மாற்றும் முறையே படித்தல் என்கிறோம்.

படித்தலில் சொற்களை பார்த்தல், உச்சரித்தால், பொருளுணர்தல் என முக்கூறுகள் உள்ளன. கண், காது, நாக்கு, மூக்கு, குரல் ஆகியவற்றுடன் உள்ளமும் இணைந்து படித்தலானது நிகழ்த்தப்படுகிறது.

நோக்கங்கள்:

     சுற்றுப்புறத்தில் அன்றாட வாழ்வில் ஒருவர் எதிர்கொள்ளும் குறிப்புகளை கொண்டு கருத்துணர்தல் வேண்டும்.

     மொழி இலக்கியங்களை படித்து பொருளுனர்தல் வேண்டும்.

     பொருளையும் கருத்தையும் அறிந்தபின் அதில் இருந்து கிடைக்கும் இன்பத்தை நுகர்தல் வேண்டும்.

     படித்தைக்கொண்டு தனது கற்பனை திறனை வளர்க்க வேண்டும்.

படித்தல் வகைகள்:

     படுத்தலில் சிறந்து விளங்குவதற்கு வாய்விட்டு படித்தல், வாய்குட்படித்தல் ஆகிய இரண்டு முறைகளையும் அறிந்து படித்தல் வேண்டும்.

வாய்விட்டுப்படித்தல்:

     எழுத்துகளை கண்ணால் பார்த்து வாயால் உச்சரித்து பொருளுணர்வதை வாய்விட்டுப்படித்தல் என்பர். இம்முறையில் கண்ணால் பார்த்து, அன்னம், உதடு, நாக்கு, பல் ஆகிய ஒலி உறுப்புகள் மூலம் உச்சரித்து, உள்ளத்தால் பொருளுணர்த்தல் ஆகிய மூன்று கூறுகளை காணலாம். 

     வாய்விட்டுப்படித்தல் கல்வி கற்றலின் ஆரம்ப நிலையில் ஒரு முக்கிய பங்கினை கொண்டு செயல்படுத்தப்படுகிறது. கற்போரின், எழுத்து, சொல், வரி, பத்தி ஆகியவற்றை படிக்க கற்கும் ஒரு அடிப்படை திறனாகும்.

வாய்விட்டுப்படித்தல முறையில் வாய்விட்டு படிக்கும் திறன் மற்றும் பொரு திறன் என ஒரு திறன்களை பயன்படுத்த வேண்டியுள்ளது.

வாய்விட்டுப்படித்தலின் நன்மைகள்:

     •  எழுத்துகளை விரைவாக ஒன்று கூட்டி சொல்லாக படிக்க உதவுகிறது.

     •  படித்தவுடன் பொருளுணர்தலுக்கு உதவுகிறது.

     •  எழுத்துகளின் ஒலியை சரியாக உச்சரிக்க உதவுகிறது.

     •  செய்யுளை ஏற்ற இசையுடன் படிக்க முடியும்.

     •  விளம்பர செய்திகளை கூற பயன்படுகிறது.

     •  பொது மேடைகளில் தனது கருத்துகளை அனைவருக்கும் தெரியப்படுத்த பயன்படுகிறது.

     •  அனைவரது முன்பும் தயக்கமின்றி பேசப் பயன்படுகிறது.

     •  கற்றல் தொடக்கத்தில் வாய்விட்டு படித்தல் பெரும் பயனளிகிறது.

வாய்க்குட்படித்தல்:

     எழுத்துகளை கண்ணால் பார்த்து ஒலி எழுப்பாமல் பொருளுணர்ந்து படிக்கும் முறையே வாய்க்குட்படித்தல் ஆகும். இன்றைய கல்வி முறையில் வாய்குட்படிக்கும் முறையை ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்குகின்றனர்.

     பொது இடங்களில் பலரும் இருக்கும் வேலையில் ஒருவரால் வாய்விட்டு படிக்க இயலாது. ஆகையால் அந்நிலையில் வாய்குட்படிக்கும் முறையே ஏற்றதாகும்.

     பல நூல்களை வேகமாக படித்து பொருளுணர வாய்குட்படிக்கும் முறையே சரியானதாக அமையும்.

வாய்க்குட்படிக்கும் முறைகள்:

     வாய்குட்படிதலை ஊக்குவிக்க பல வழிமுறைகள் உள்ளன.

     தினமும் செய்தித்தாள் வாசிப்பதன் மூலம் ஒருவரின் வாய்குட்படிக்கும் திறனை வளர்களாம்.

     பேருந்து மற்றும் பிற வாகனங்களில் செல்லும்போது சாலையோரம் இருக்கும் எழுத்துகளை அல்லது செய்திகளை வாய்குட்படிப்பதன் மூலம் வேகமாக படித்து பொருளுணரந்துக் கொள்ளும் திறன் வளர்ச்சியடையும்.

வாய்க்குட்படித்தலின் நன்மைகள்:

     •  ஒலி உறுப்புகளுக்கு வேலையில்லாததால் உடல் சோர்வு ஏற்படாது.

     •  படிப்பின்மீது ஆர்வத்தை உண்டாக்குகிறது.

     •  பிறருக்கு இடையூறு இல்லாமல் படிக்க முடிகிறது.

     •  கண்ணும் மனமும் மட்டும் செயல்படுவதால் படிப்பில் முழுவதுமாக கவனம் செலுத்தப்படுகிறது.

     •  கற்பனை மற்றும் சிந்தனை திறனை அதிகரிக்க உதவுகிறது.

     •  குறைந்த கால நேரத்தில் அதிகமான நூல்களை படிக்கலாம்.

தொகுப்புரை:

     கல்வி கற்றவர் என்பதற்கான ஒரு அடையாளமே அவரது படிக்கும் திறமைதான். பொது இடங்களில் தான் கல்வி கற்றவர் என்பதை நிரூபிக்க அவரது படித்தல் திறனயே வெளிபடுத்த வேண்டியிருக்கும்.

0 கருத்துகள்

Recent posts

முதுமை (Muthumai) தமிழ் சிறுகதை, Tamil Short Stories