முதுமை
ஒரு நாட்டினை ஒரு இளம் அரசன் ஆட்சி செய்து வந்தான். அவன் ஆட்சிக்காலத்தில் மிகவும் வறுமையான சூழ்நிலை நிலவியது. மக்கள் உண்ணவே உணவு இல்லாத நிலமை. நாட்டில் குறைந்த அளவே உணவு இருப்பு இருந்ததால் அந்நாட்டு அரசன் ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
விதைகள் இப்போதுதான் விதைக்கப்பட்டுள்ளது அறுவடைக்கு இன்னும் ஆறு மாதகாலம் உள்ளது. நம்மிடம் உள்ள உணவினை நாளொன்றுக்கு இருவேளையாக அனைவருக்கும் கொடுத்தாலும் கூட மூன்றுமாத காலத்திற்குள் அனைவரும் இறந்துவிடுவோம். ஆகையால் நான் இன்று ஒரு முக்கியமான மற்றும் கடுமையான ஒரு தீர்வினை கூறப்போகிறேன்.
நம் நாட்டின் அரசவை உறுப்பினர்கள் முதன்மையானவர்கள், நாட்டின் படை வீரர்கள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமானவர்கள், நாட்டின் இளம்பெண்கள் மற்றும் இளம்பருவ ஆண்கள் பலம் மிக்கவர்கள், குழந்தைகளே நம் நாட்டின் வருங்காலம், திருமணமானவர்கள் நம் நாட்டின் உழைப்பாளிகள், ஆனால் வயதில் முதுமையடைந்தோர் இந்நாட்டில் அனைத்தையும் பார்த்து அனுபவித்து தன் வாழ்நாள் முடிவுக்காக காத்திருப்பவர்கள்.
ஆகையால் அவர்களை கொன்று விடுங்கள் என்று ஆணையினை பிறப்பித்தார். இதை கேட்டு அனைவரும் திகைத்து நின்றனர். இம்முறை நாளை விடிந்தவுடன் நம் நாட்டு படைவீரர்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
விடிந்தவுடன் அனைத்து வீரர்களும் நாட்டு மக்களன் இல்லத்திற்கு சென்று அங்கு இருந்த வயதில் முதிர்ந்தோரை கொன்றனர். நாடு சிரியதென்பதாலும் முதுமையானோர் குறைந்த அளவே இருந்ததாலும் ஒரே நாளில் அரசரின் ஆணை படை வீரர்களால் நிறைவேற்றப்பட்டது.
இறந்த பலர் தன் இறப்பினை உளமாற ஏற்றனர். சிலர் தன் குடும்பத்தை விட்டு பிரிய மனமில்லாமல் வீரர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தனர், சிலர் வீரர்களின் முன் மண்டியிட்டு அழுதனர். ஆனால் வீரர்கள் யாரையும் விடவில்லை. அரசன் வாக்கு தெய்வத்தின் வாக்கு என்று எண்ணி தன் செயலை செய்தனர்.
ஐந்து மாதமான பின் விதைத்த விதைகள் பெரும் பயிர்களாக வந்திருந்தன. அறுவடைக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. அனைவரும் பயிர்களை சரியாக பராமரிக்க வேண்டும் என்று அரசர் அனைவரிடமும் கூறினார்.
சிறிது நாட்களில் ஊர் மக்கள் அரசரிடம் சென்று பயிர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நாசமகின்றன அரசே என்று கூறினர். எவ்வாறு பயிர்கள் நாசமாகின்றன என்று அரசர் கேட்டார்.
பூச்சிகள் பயிர்களை அறித்து விடுகின்றன, எலிகள் பயிர்களை புடுங்கி விடுங்கின்றன, வெட்டுகிலிகள் பயிர்களை உண்டு விடுகின்றன, யானைகள் பயிர்களை மிதித்து விடுகின்றன இவ்வாறு பல இயற்கையான முறையில் பயிர்கள் நாசமாக்கின்றன அரசே.
அரசர் சபைத்தலைவர்களோடு பயிர்களை காண வயல்கள் உள்ள திசைக்குச் சென்றனர். அரசர் வயல்களை நெருங்கினார். வயல்களை நெருங்கியதும் பயிர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாசமாவதை கண்டு மனம் கொழம்பினார். என்ன செய்வது என்று புரியாமல் சபைத்தலைவர்கலோடு பேசிக் கொண்டே முன்னேறி சென்றுக்கொன்று இருந்தார்.
அப்போது ஒரு வயலில் மட்டும் பயிர்கள் நாசமாகாமல் நன்று செழிப்போடு இருந்தது. அரசர் அதை கண்டு என்ன இது இந்த வயலில் மட்டும் பயிர்கள் செளிப்பிடு உள்ளதே என்று கேட்டார். வயலின் உரிமையாளரை கூப்பிடுங்கள் என்றார்.
ஒரு இளம்பருவ திருமணமாகாத ஒரு வாலிபன் அரசரிடம் வந்தார். அரசே இது என்னுடைய வயல்தான், நான்தான் இங்கு விவசாயம் செய்கிறேன் என்று கூறினான்.அரசர் அந்த வாலிபனிடம் எவ்வாறு உமது வயலில் மட்டும் பயிர்கள் செளிப்போடு உள்ளது என்று கேட்டார்.
அரசே, நான் கூறினால் தங்களின் கோபத்திற்கு ஆளாகுவேன்.
நான் கோவபட மாட்டேன் நீ தாராளமாக என்னிடம் கூறலாம். என் நாட்டு மக்களை காக்கும் பொறுப்பு எனக்குள்ளது. பயிர்களை கொண்டே வறுமையையும் பசி பட்டினியால் வாடும் மக்களை காக்க முடியும். தயவு செய்து கூறுவாயக, என்று அரசர் கூறினார்.
என் வயலில் மட்டும் பயிர்கள் செழித்து வளர காரணம், வயதில் முதுமயடைந்த என் தத்தாவின் அறிவுரையை பின்பற்றி நான் நடந்துக் கொண்டதுதான் அரசே. வயதில் மூத்தவர்களான முதுமையானோர் நாட்டிற்க்கு உதவ மாட்டார்கள் என்று கூறி தாங்கள் அனைவரையும் கொல்ல ஆணையிட்டீர்கள்.
சிறு வயதில் என் தந்தையையும் தாயையும் இழந்த நான் என் தாத்தாவின் மூலமே வளர்க்கப்பட்டேன். இவ்வளவு காலம் விவசாயம் செய்து விட்டு இந்த ஆண்டு உடல்நலம் குன்றி படுத்தப் படுக்கையானார். அதனால் அவருக்கு பதில் நான் விவசாயம் செய்யும் சூழல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் தாத்தாவின் அறிவுரை மூலம் அனைத்தையும் செய்துக் கொண்டு இருந்தேன். நீங்கள் ஆணைப் பிரபித்த பின், என் ஒரே உறவினரான தாத்தாவினை பிரிய மனமில்லாமல் அவரை வீட்டிற்குள் மேல் பகுதியில் மறைத்து வைத்து விட்டு வீரர்களிடம் இந்த வீட்டில் முதுமையானோர் யாரும் இல்லை என்று பொய் கூறி விட்டேன்.
பயிர்கள் நாசமாக தொடங்கியதும், நன் என் தாத்தாவிடம் கூறினேன். தாத்தா அவரின் அனுபவ அறிவினை கொண்டு ஒவ்வொரு நாச செயலுக்கும் ஒரு தீர்வினை கூறி அதனை செய்ய சொன்னார். நானும் தாத்தா கூறியது போன்றே செய்தேன். அதன் காரணமாகவே என் வயலில் மட்டும் பயிர்கள் செழிப்பாக உள்ளது அரசே.
அத்தகைய தீர்வுகள் என்ன என்பதை அனைவரிடமும் கூறு, என்று அரசர் அந்த வாலிபரிடம் கூறினார்.
தாங்கள் எனக்கொரு வாக்கு தரவேண்டும் அரசே. உங்களின் ஆணயை மீரியதற்காக என்னை மன்னித்து, என் தாத்தாவின் உயிரை எடுக்காமல் விட்டு விட வேண்டும்.
நான் உனக்கு வாக்களிக்கிரேன். உன்னையும் உன் தாத்தாவையும் மன்னித்து ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறேன். அதற்கு பதிலாக நீ அனைவரிடமும் பயிர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று கூற வேண்டும்.
அரசரன் சொல்லை கேட்ட வாலிபன் அனைவரிடமும் பயிர்களை காப்பதற்கான வழிமுறைகளை கூறினான்.
ஆறு மாதகாலம் முடிந்து அறுவடை சிறப்பாக நடந்து அனைத்து நாட்டு மக்களும் வயிறார உணவு உண்டனர்.
அனுபவம் ஒன்றே வாழ்வில் ஒருவரை உயர்ந்தவனாக்கும். அனுபவம் நிறைந்த ஒருவரின் சொல்லை கேட்பதன் மூலம் ஒருவர் அனைவரும் போற்றக்கூடிய அளவில் தலைசிறந்தவராக தன் வாழ்வில் புகழ் அடைவார்.
"இளமையை மூப்பென் றுணர்தல் இனிதே"
- இனியவை நாற்பது
0 கருத்துகள்